அன்றைய நாள்...
எத்தனை மணி நேரம்
பாவம் வயல் வரம்பிற்கு கூட வலித்திருக்கும்
ஊர் கதையில் தொடங்கி
உள்ளத்து உணர்வுகள் வரை
பரிமாறிய அன்றைய நாள்...
மெல்லிய நீல நிறத்தில்
பாவாடை தாவணி...
விரித்துவிட்ட உன் கூந்தல்
வேதனையுடன் ஒரு அறுகம் புல்
உன் கையில்...
நடந்துகொண்டே வயல் வரம்பளந்தோம்....
பொழுது சாயும் அந்தி நேரம்
வானம் பார்க்க ஆசைப்பட்டு
வந்திருந்தாய் வயல் வெளிக்கு
வானம் என்னடி வானவில் நீதானடி
எனக்கு அன்று அழகாய் தெரிந்தாய்...
என்றும் இல்லாதவாறு அன்றைய நாள்
உன்னை தொட்ட தென்றல்
என்னை வருடும் போது ஏதோ ஒரு
புல்லரிப்பு. அந்த நொடி கண்ணை மூடி
நானும் காற்றி கலந்தேன் இரண்டாம் முறையாக...
உன் கண்களை நான் எப்போதும்
பார்த்ததில்லை. உன்னைப்பார்க்கும் போது
மட்டும் நான் கோழையாகிறேன்....
சில சமயம் கோமாழியாகவும் கூடத்தான்...
மாமன் மகள் தானே
மஞ்சள் கயிறு நான் தானே
கட்டுவேன் என்று ஒரு
வைராக்கியம் எனக்குள்...
தட்டிக்கொடுக்க எனக்கு
யாரும் இருந்ததில்லை
தலையணை கூட என்னை
அணைத்ததில்லை.
தவறி ஏதாவது கனவு கண்டாலும்
காட்சிகள் கண்ணில் தெரிவதில்லை...
உள்ளே மனம் சொல்லும்.
குரங்கு வேடம் போட்டு
குத்துக்கறணம் அடித்தாவது
அவளை சிரிக்க வை என்று...
உன் புன்கையில் பலகோடி
உயிர் வாழும்...
நானும் வாழ்ந்திருப்பேன்
கோடியில் ஒருத்தனாய்...
நான் இறக்கும்முன் நீ பிறந்திருந்தால்... !
No comments:
Post a Comment