கதிரவனின் மறைவு...
உன்னைத் தேடுகிறது.
ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்
அலை கடல் எனத் திரழ்கிறது.
மனிதம் கொண்ட மனிதர்கள்
மனதில் நாயகன் நீ இன்று.
ஒரு துளியும் இரக்கம் இன்றி
ஓர் இனத்தின் எதிர்காலத்தையே
கொன்றொழித்த களைப்பில்
காடையர் கூட்டம்...
கரைகிறது என் மனம்.
கசிகிறது உன் நினைவுகள்.
காவியத் தலைவனே
காதலடா உன்னில் எனக்கு.
கதிரவனுக்கு ஏதடா மறைவு
காதல் கொண்ட உன்
நினைவுகளுக்கேதடா அழிவு.
இன்றும் புல்லரிக்கின்றது எனக்கு
உன்னுடைய தாகங்கள்
என்னுடைய நாடித்துடிப்பாய்
அமைந்ததை நினைக்கையில்...


London Time
No comments:
Post a Comment