நேசித்த நினைவுகள்...
உயிரும் மெல்ல உடைகிறேன் என்கிறது
உடலை விட்டுப் பிரிகிறேன் என்கிறது
மனமும் உனக்காய் ஏங்கித் தவிக்கிறது
மரணமும் எனக்கு பக்கமாய் தெரிகிறது
உன்னை நேசித்த நினைவுகள் நெஞ்சை பிளிகிறது
உன்னிடம் யாசித்த பொழுதுகள் கண்ணீராகிறது
நெஞ்சம் வெடித்தது நேசம் கசந்தது
உலகும் வெறுத்தது உடலும் இயங்க மறுத்தது
உன்னைக் கண்டது காதல் கொண்டது
உனக்காய் உருகி நின்றது கனவுகள்
வளர்த்தது என் விழிகளில் உன்னை சுமந்தது.....
எல்லாமே பாவமானது.....
பாதை இல்லாத சுவடுகள் நோக்கியே என்
பாதமும் நடை போட்டு வலியால் துடிக்கிறது
பிறந்த பாவமாய் என் வாழ்க்கையானது
உன்னை பிரிந்ததே கொடுமையானது
தினமும் பிதற்றுகிறேன் கனவிலும்
உனக்காக மதி கெட்டவளாய்
தன்னைத்தானே வெட்டிப்பார்ப்பதாய்
எனக்குள் வலிகள் சொந்தமானது
உறவுகளும் என்னை வெறுத்தது
உயிரும் எனக்குள் கனத்துப்போனது
ஒவ்வெரு நொடியும் யுகமாய் தெரிந்தது
விடியலும் ஒளி இழந்த அஸ்தமனமானது
நேசித்த நீ என்னை வெறுத்ததால்
என் வானமும் கார்காலமானது
என் தலைசாய்க்க உன் உறவு இல்லாததால்
வாழ்வை வெறுக்கிறேன்
வாழ மறுக்கிறேன்
பிரிவை ஏற்கிறேன்
சாவை அழைக்கிறேன்
வந்த இடத்திற்கே மீண்டும் போகத் துடிக்கிறேன்
போகும் வழி தெரியாமல் தத்தளிக்கிறேன்
வழி காட்டிடுமா உன் கலங்கரை.......?


London Time
No comments:
Post a Comment