தொடருட்டும் உன் பயணம் இதமாக.....
யாரும் இல்லாத உலகில் தன்னந்தனியாய்
நடை பழகிய என்னுடன் கைகோர்த்தவன் நீயடா
என்னை சிரிக்க வைத்தாய்
சிலிர்க்க வைத்தாய்
அழவும் கூட வைத்தாய்
சிலநேரம் என் நிழலாய்
என்னை தொடர்ந்தாய்
பல நேரம் தொலை தூரமானாயடா
தொடுவானமாய்...
ஒரேவகுப்பில் உன் அருகில் நான் இருந்த
போதும் என்னை கண்டும் காணாதவன் போல
நீ நடித்த நாட்கள் தான்
எத்தனை எத்தனையடா?
தினமும் வரவு பதிவேட்டில் உன் கிறுக்கலான
கையெழுத்தை என் விரல்கள்
தடவிப் பார்த்து மகிழ்ந்த நாட்கள்
தான் எத்தனை எத்தனையடா....
உன் மென்னையான வெள்ளை உள்ளத்திற்குள்ளும்
எங்கேயடா ஒழித்து வைத்திருப்பாய்
உன் பொல்லாத அந்த கோபத்தை
நேரம் பார்த்து விஸ்வரூபம் கொண்டு
வெளியே குதிப்பதற்கு...
நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் சுவாசகாற்றையே நானும்
சுவாசித்தேனடா
தினமும் உன் வீட்டை திரும்பி; பார்ப்பதில்
அப்பிடி ஒரு சந்தோசம் ஏதோ
உன்னையே தரிசித்தது போல்
உன் சின்னச் சின்ன அசைவுகளைக் கூட நான்
விரும்பி யாசித்டதேனடா
உனக்கு தெரிந்தும் தெரியாததைப்போல்
நான் வாசித்த முதல் கவிதை கூட நீதானடா
உன்சலசலத்த பேச்சும் சிரிப்பொலியுமே
என் மனம் விரும்பி ரசிக்கம் சங்கீதங்கள்
உன் நண்பர்களின் ஜோக்குகளும் அலட்டல்களும்
அவர்களடன் இணைந்து இந்த உலகத்தையே
மறந்த நாட்கள் தான் எத்தனையடா
இன்னும் எத்தனை எத்தனை சம்பவங்களடா
சுகமான தூரல்களாய் எம்மை முத்தமிட்டு
சென்றன....
போடா..!
எல்லாமே இன்றுடன் எம் மன ஏட்டில் பதிந்து போன
சுவடுகளாகின்றதடா
உன்னை மட்டுமே காணத்துடிக்கம் என்
விழிகள் இனி பாவமடா..
அந்த இனிமையான நாட்கள்
எல்லாம் மீண்டும் நம் வாழ்வில் தொடராதா
என்று என் மனம் ஏங்கி தவிக்கதடா!
காலம் தான் எம் பயணத்திற்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டது.
அதை மீண்டும் புள்ளிகள் இட்டு தொடரும்
சக்தி எனக்கில்லையடா
இன்று நீ கூட என்னை தவிக்க விட்டு விட்டு தனியாக
உன் பயணத்தை தொடர்கிறாய்
எப்படியடா உன்னால் மட்டும் முடிகிறது.
கண்ணீருடன் விடை தருகிறேன்
உன் பயணம் முடிவில்லாது
தொடர்வதற்காய் வேறு திசையில்
மீண்டும் தனிமையில் நான்
உன் நினைவுகளுடன்...
Friday, November 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment