மனிதம் செத்து மனிதன் வாழ்வதா...?
ஒடிக்கப்ட்ட சிறகுகளும்
அடைக்கப்பட் சிறைகளும்
எமக்கு மட்டும் நிரந்தரமாக
விடியாத பொழுதுகள் இன்றும்....
இமைமமூடும் கணப்பொழுதும்
குண்டு தலைவிழும் எனநினைத்து
வழித்திருந்த நாட்கள் எத்னையோ...
அர்த்தமற்ற ஆக்கிரமிப்புக்களும்
அடிமைப்படுத்தும் அதிகாரங்களும்
அன்னியார் கையில் இன்று
அவதிப்படுவது என்னவோ
அப்பாவி உயிர்கள் தான்...
எத்தனையோ கணவுகளுடன்
என்னவோ கற்பனையில் கட்டிய
கோட்டைகள் கயவர்கள் கண் பட்டதோ
என்னவோ பூத்த மலர் காய்க்குமுன்
கொய்யப்படுவது போல் கொய்யப்பட்டன...
தென்னையும் தேயிலையும் நெல்லும்
என உற்பத்தியில் சிறந்த என் நாடு
இன்று குண்டுச் சத்தத்திற்கும் கொலைவெறியர்
நடமாட்டத்திற்கும் அடிபணிந்தது...
தெரிந்தெடுத்து கழமனுப்பிய தலைவர்களோ
இன்று அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து
அசைபோடுகின்றன மண்டியிட்டு...
பிறந்த ஊர் எங்கோ...
வாழ்ந்த ஊர் எங்கோ...
வாழப்போகும் ஊர் எங்கோ...
இதில் வாழ்க்கையை எங்கு தேட...
உலக நாடுகளுக்கு
எம் உள் நாட்டுப் பிரச்சனை
என்னவோ உல்லாசப் பிரயாணம் போலும்
அறிக்கைகளுக்கும் அரசியல்
ஆக்குரோசங்களுக்கும் குறைவில்லை....
இறைவனுக்குகக் கூட இரக்கம் இல்லை.
இயற்கையைக் காட்டிப் பயமுறுத்துகிறார்
இறைவனின் பல படைப்புகளுக்கு
எப்போதும் அர்த்தம் புரிவதில்லை
அந்த வரிசையில் எமது இனமும்
இணைக்கப் பட்டது என்று தெரியவில்லை...
இறைவா ! ஒரேயொரு வரம் வேண்டும்.
உன் கண் அசைவில் இப் பூமியின்
இயக்கத்தை நிறுத்து முடிந்தால் நிர்மூலம் ஆக்கிவிடு...
Thursday, May 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நண்பரே ! ஒடுக்கப்பட்ட இனத்தின்,ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரலாக தாங்கள் எழுதிய எழு”தீ”யான கவிதை மக்களைத் திரட்டாமல் விடிவில்லை.தாங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் ஓர் தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் முன்னணியில் மக்கள் ஜன நாயகத்தில் கிளர்ந்தெழும் போதுதான் அவர்தமக்கு விடுதலை,உரிமை ,மக்கள் ஜனநாயகம் யாவும் அவராலே அவரது போராட்டத்தாலே தான் வென்றெடுக்கப்படும் அதுவல்லாது சாபமிடுதல் எல்லாம் ஒன்றும் பயனில்லை..
தோழமையுடன் தமிழ்பாலா’’’’’’’’’
Post a Comment