ஏதேதோ ஞாபகங்கள்...
பயணப்பாதை தொடர்கிறது
பாதையோர மரங்கள் ஓடும் வேகத்தில்
பளசெல்லாம் நினைவுக்கு வருகிறது...
பல வருடங்கள் நான் உன்னை நீங்கி.
பரிதவித்துப் போனேன் போடி..
படபடத்த நகர வாழ்க்கை
இல்லை இல்லை நரக வாழ்க்கை
காலமெல்லாம் உன்னைக் கட்டியணைத்து
கதைபேசவே நினைத்தேன்
காலம் தான் எம்மைப் பிரித்து வைத்தது.....
கரைந்த வழி நீருக்கும் அன்புகசிந்த
உன் மனமும் என்னை வாட்டுகிறது. வருடுகிறது.
நான் சோர்வடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்குட'; உன் கரங்கள்....
சலசலல என்ற உன்சப்தம் என்
மன சஞ்சலங்களை போக்கும்.
உழைத்த களைப்பில் ஓடோடி வந்து
உன்னை முத்தமிடுவேன்.
தூக்கம் தானாகவே என்னை முத்தமிடும்.
பூர்வ ஜென்ம பந்தம் உனக்கும் எனக்கும்.
நீ என்னை தாண்டம் போது என்
உரோமங்கள் சிலிர்க்கின்றது.
சிந்தனைகள் புத்தாக்கம் பெறுகின்றது.
உன்னைக் காண்பதென்றால்
என் கண்களுக்கும் கூட அவா....
தேடுகிறது திசை எங்கும்
திரண்ட உன் அழகைக் காண....
என் இயற்கை அன்னையே...


London Time
No comments:
Post a Comment