அந்த நொடி...
மேசையோரம் சில மாத்திரை உருண்டைகள்.
ஒளி அற்ற இருண்ட அறையில்
ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும்
உருகிக் கொண்டிருந்தது.
அயலவர்கள் எங்கு சென்றனரோ
அறை முழுவதும் அமைதியாகவே இருந்தது.
சுய நினைவை இழந்த ஒருவன்
மேசை மீது படுத்திருக்கிறான்.
எழுதியதும் எழுதாததுமாக காகிதங்கள்
அங்கும் இங்கும் பரந்து காணப்பட்டது.
சிந்தித்து களைத்தே அவன்
சுய நினைவை இழந்திருக்க வேண்டும்.
தலையை தூக்க முயற்சித்தேன் முடியவில்லை.
விறைத்து விட்டது போலும். மேசை மீது
இரத்தக் கறைகள் கைகளில்
இருந்து கசிந்துகொண்டிருந்தது.
கண்களை திறந்தபடியே உயிர் பிரிந்திருக்கின்றது.
நெஞ்சை அணைத்தபடி மறு கை.
அங்கு ஒரு பெயர் நெருப்பால் சுடப்பட்டிருந்தது.
அது கூட காயவில்லை.
அவ் ஜீவனின் வலிலை என் மனமும்
அனுபவித்ததோ என்னமோ
கண்கள் கலங்கியது.
மனம் கனத்தது. இறுதி கணப் பொழுதுகளை நினைத்து...