Sunday, November 16, 2008

இனிவருமோ அந்த வசந்தகாலம்...

சிறுவயது பருவமது

சிந்திக்கத் தெரியாத வயது அது
இருகரம் கோர்த்து நீயும் நானும்
உலவிய கடற்கரையோரம்...
வந்து வந்து போகும் கடலலையை
நீயும் நானும் தொடுவதும்
விடுவதுமாய் விளையாடிய
அந்த நாட்கள்இனிவருமோ...

தொலைதூரம் ஒரு படகு சிறு
உருவமாய் தெரியவே சின்னவள் நீ
என்னை கேட்ட கேள்வி இப்போதும்
சிரிப்புத்தான் வருகிறது...
கரையில் இம்மளவு பெருசா உள்ள
வள்ளம் கடலுக்குள் போனவுடன் மட்டும்
எப்பிடி மாமாசின்னதாச்சு... என்றாய்.
நானோ மிகுதியெல்லாம் கடலுக்குள்
போய்விட்டது என்றேன்.
அந்த இனிமையான காலங்கள் இனிவருமா?

நான் எங்கு சென்றாலும்என் சேட்டு
தலப்பை பிடித்தபடிஎன் கூடவே வருவாய்...
இப்போதெல்லாம் நான் விரும்பி
அழைத்தால் கூட நீ வருவதில்லை.
அன்று ஒரு வார்த்தைக்கு இரு
வார்த்தையாய் பல வார்த்தை பேசுவாய்...
அன்று அவ்வளவு பேசியதோ என்னவோ
இன்று பேசுவதற்கு வார்த்தைகள் இன்றிப்போனது.
உன்னனுடன் நான் ஆசை தீரப்
பேசும் அந்த நாள்இனி வருமோ...!

Pages